viral video: கோரைப் பற்களுடன் நடுங்க வைக்கும் காபூன் வைப்பர்! எப்படி இருக்குன்னு பாருங்க
பார்ப்பவர்களை மிரள வைக்கும் கோரைப் பற்களுடன் இருக்கும் அரிய வகை காபூன் வைப்பர் பாம்பின் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காபூன் வைப்பர், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் காணப்படும் மிகவும் விஷமுள்ள பாம்பு இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
இது ஆப்பிரிக்காவின் மிக கனமான விஷ பாம்பாகும். சுமார் 8 கிலோ (18 பவுண்டுகள்) எடை கொண்டது, மேலும் இது 2 மீட்டர் (சுமார் 7 அடி) நீளம் வரை வளரும்.
காபூன் வைப்பர் எந்த பாம்பிலும் இல்லாத மிக நீளமான கோரைப் பற்களைக் கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.இந்த வகை பாம்பின் தோல் வெல்வெட் போன்று காணப்படும்.
அதன் கோரை பற்கள் இது 4 செ.மீ (1.6 அங்குலம்) நீளம் கொண்டது. தடிமனான உடல் செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்கள் பஃப், ஊதா மற்றும் பழுப்பு நிறங்களுடன் பிரம்மாண்டமான தோற்றத்தில் காணப்படும்.
குறித்த பாம்பின் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |