ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதி - ஷாக்கான ரசிகர்கள்!
ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
ஜி.பி. முத்து
டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் ஜி.பி.முத்து. தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இவருக்கும், கமலுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் இணையத்தில் வைரலானது. தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக கலந்து கொண்டுள்ளார்.
ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், ஜி.பி.முத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஜி.பி.முத்துவிற்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் இருந்தோ ஜி.பி முத்து தரப்பில் இருந்தோ எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
??? pic.twitter.com/Cb2eEqHCEW
— Sonia Arunkumar (@rajakumaari) April 15, 2023