வாரத்தின் எந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம்னு தெரியுமா? தங்கம் இரட்டிப்பாகுமாம்
பொதுவாகவே தொன்று தொட்டு இன்று வரையில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.
தங்கமானது ஒரு பெருமதி மிக்க உலோகம் என்பதால், இதன் மதிப்பை பற்றி யாருக்கும் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.
சாஸ்திரங்களின் பிரகாரம் தங்கம் ஒரு மங்களகரமான உலோகமாக பார்க்கப்படுகின்றது. இது குரு பகவானுடன் தொடர்புப்படுத்தப்படுவதுடன் லட்சுமி தேவி மற்றும் குபேரனுடக்கும் உகந்த உலோகமாக தங்கம் குறிப்பிடப்படுகின்றது.
அனைவருக்குதே தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே தங்கம் நிலைத்திருக்கின்றது. சிலர் எவ்வளவு முயன்றாலும் தங்கத்தை சேர்க்க முடிவதே இல்லை.
ஆனால் சாஸ்திரங்களின் அடிப்படையில் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கம் வாங்குவதால், தங்கம் சேர்வது மட்டுமன்றி வாழ்வில் பெருமளவான செல்வ செழிப்பை ஈர்க்கும் வாய்ப்பு அமையும் என குறிப்பிடப்படுகின்றது.
திங்கட்கிழமை
இந்து மத சாஸ்திரங்கயளின் அடிப்படையில் திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாக பார்க்கப்படுகின்றது. சந்திரன் வளர்ச்சி, அமைதி, நிறைவு ஆகியவற்றுடன் தொடர்புப்படுகின்றார்.
சந்திரன், வெள்ளியுடன் தொடர்புடைய கிரகமாக இருந்தாலும் இந்த நாளில் தங்கம் வாங்கினால், அடிக்கடி தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு தேடி வரும். அதனால் செல்வம் புவியும் என நம்பப்படுகின்றது.
செவ்வாய்கிழமை
செவ்வாய்கிழமையில் சாஸ்திரங்களின் படி மங்கலகரமான நாளாக கருதப்படுகின்றது. இந்த நாளில் யார் வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம்.
குறிப்பாக ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் பலம் குறைந்து இருந்தால் அவர்கள் வாழ்க்கைவில் ஆற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கவும் செவ்வாயின் ஆசியை பெறுவும் செவ்வாய் கிழமையில் தங்கம் வாங்குவது நல்ல பலனை கொடுக்கும்.
வியாழக்கிழமை
குருவின் ஆற்றலை நிறைந்த நாளான வியாழக்கிழமையில் எப்படிப்பட்ட முதலீட்டையும் செய்யலாம். இது உங்களை வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
குறிப்பாக தங்கம், குருவிற்குரிய உலோகம் என்பதால் குருவின் அசீர்வாதம் நிறைந்த வியாழக்கிழமையில் தங்கம் வாங்குவது செல்வ செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்குவது மிகவும் சிறப்பானது.
புதிய நகைகளை ஞாயிற்றுக்கிழமையில் அணிவதும் மனதையும், உடலையும் பலப்படுத்துவதுடன் என நம்பப்டுகின்றது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மேலும் தங்கததை ஈர்க்கும்.
பொதுவாக தாமிரம் கலந்த தண்ணீரை குடிப்பதால் உடலில் சூரிய ஆற்றல் அதிகரிக்கும் என்பார்கள். அதனால் செம்பு, தாமிரம் ஆகியவற்றை கலந்து செய்யப்படும் தங்க நகைகளை ஞாயிற்றுக்கிழமையில் வாங்குவது பெரும் செல்வத்தை கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |