வயதான பாட்டிக்கு உதவிச் செய்ய முற்படும் நாய்க்குட்டி! வைரலாகும் வீடியோக்காட்சி
தன்னுடைய உரிமையாளருக்கு கதிரையை எடுத்து கொடுக்கும் நாய்க்குட்டியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோக்காட்சி
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை.
அந்த வகையில், வயதான பாட்டியொருவர் அவரின் வீட்டிலுள்ள பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றுகிறார்.
பின்னர் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. ஆகையால் எங்கு அமரலாம் என கீழே தேடுகிறார். அப்போது அங்கிருந்த குட்டி கதிரையை நாய்க்குட்டி நகர்த்திக் கொண்டு வந்து தருகிறது.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. நாய்குட்டி இவ்வளவு குட்டியாக இருக்கும் போதே அவரின் உரிமையாளரின் மீது அதிகமான அன்பு கொண்டுள்ளது.
இந்த நாய் பெரிய நாயாக வளர்ந்த பின்னர் கவனமாக அவரின உரிமையாளரை பார்த்து கொள்ளும் என இணைவாசிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
— out of context dogs (@contextdogs) August 7, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |