நாய்களுடன் வம்பிற்கு நிற்கும் பறவைகள்.. வியந்து போன நெட்டிசன்கள்!
குட்டி நாய்களுடன் சண்டைக்கு நிற்கும் பறவைகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு பாடல் வீதம் வைரலாகி வருகின்றது. இதில் பார்க்கும் போது சில காட்சிகள் வியப்பாகவும், சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் இருக்கும்.
அந்த வகையில், இரண்டு நாய்க்குட்டிகள் பாதையில் இருக்கும் இரண்டு பறவைகளை பார்த்து குரைத்து காட்டுகின்றது.
அப்போது அந்த பறவைகள் அங்கிருந்து செல்லாமல் பதிலுக்கு நாய்களின் முன் கிச்சிட்டு காட்டுகின்றது. தொடர்ந்து நாய்கள் இரண்டு குரைத்து கொண்டே இருக்கின்றது.
ஆனால் துளியளவு கூட பறவைகள் பயம் கொள்வது போன்று தெரியவில்லை.
Be Happy Sunday is done… so what Next Sunday is not far away… cheer up n
— ?Kodhai? (@podhigaimagal) July 16, 2023
✨Good nite✨ pic.twitter.com/Jv7TwPOsG7
இந்த காட்சியை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், பறவைகளின் தைரியம் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை பார்த்த இணையவாசிகள்,“ என்னா தைரியம் பாரு பறவைக்கு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |