ஐஸ்க்ரீம் கொடுப்பது போல் ஏமாற்றிய கடைக்காரரை.. நடனத்தால் மயக்கிய குழந்தை: ட்ரெண்ட்டாகும் காட்சி!
ஐஸ்க்ரீம் கொடுப்பது போல் ஏமாற்றிய கடைக்காரரை தன்னுடைய நடனத்தால் மயக்கிய குழந்தையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளோ அல்லது வெளியில் செல்லும் போது பார்க்கும் குழந்தைகளோ ஏதாவது ரசிக்கும் வகையில் செய்தால் வேடிக்கையாக இருக்கும்.
கள்ளம் இல்லாத அந்த மனது மற்றவர்கள் காட்டும் அன்பிற்காக சில பெரிய பெரிய விடயங்களை செய்வார்கள்.
அந்த வகையில் சிறுமியொருவர் ஐஸ்க்ரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்றது. கடைக்காரர்கள் ஐஸ்க்ரீம் தராமல் குழந்தையிடம் விளையாட்டு காட்டினார்.
குழந்தையின் சமார்த்தியம்
அவர் ஒரு குச்சியில் ஐஸ்க்ரீம் வைத்து குழந்தையின் கையில் கிடைக்காதவாறு நீட்டிக் கொண்டே இருந்தார். கடுப்பான குழந்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட ஆரம்பித்து விட்டார்.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒன்றாக திரண்டு குழந்தை ஆடுவதை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
குழந்தையின் ஆட்டத்தை பார்த்து அவரும் கடையை விட்டு வெளியே வந்து ஆட ஆரம்பித்து விட்டார். இந்த காட்சி பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
இதன் பின்னர் கடைக்காரர் குழந்தையிடம் ஐஸ்க்ரீமை கொடுத்து விட்டார். குறித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ என்னாவொரு புத்திசாலித்தனம்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
और परेशान करो बच्चे को.? pic.twitter.com/a394mquc8o
— Awanish Sharan ?? (@AwanishSharan) November 26, 2021
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |