Viral video: தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த பூனைக்கு ஆமை கொடுத்த அதிர்ச்சி
தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த பூனைக்கு ஆமைக் கொடுத்த அலப்பறை காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பூனைகளின் அலப்பறை காணொளிகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பூனையொன்று தாகத்துடன் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளது.
அப்போது பூனை தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் தொட்டியில், சிறிய ஆமையொன்று நீந்திக் கொண்டிருக்கிறது.
பூனை தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கும் பொழுது மெதுவாக மிதந்து மேலே வந்த ஆமை பூனையிடம் விளையாடுகிறது. கீழே சென்று சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் மேலே வந்து பூனையிடம் விளையாடுகிறது.
ஆமையின் அலப்பறையை பூனை எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பது வியப்பாக உள்ளது.
இந்த காணொளியை இணையவாசிகள், தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
Don’t drink my house.. 😂 pic.twitter.com/eBQVNxy3A0
— Buitengebieden (@buitengebieden) May 4, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
