கன்றுகுட்டியைப் பார்த்து கண்ணீர் விடும் பசு: ஆனால் மகிழ்ச்சியில் வேடிக்கை பார்க்கும் மக்கள்
உலகிலேயே மிகவும் குள்ளமான பசுமாடு வங்கதேசத்தில் இருக்கிறது. இதன் உயரம் 51 சென்டிமீட்டர் மட்டுமே. வங்கதேசம் டாக்கா அருகே இருக்கும் பண்ணையில் இந்த பசு வளர்ந்து வருகிறது. இதற்கு முன்னர் கேரள மாநிலத்தில் உள்ள பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என்று சொல்லப்பட்டு வந்தது. அந்த பசுவின் உயரம் அறுபத்தி 61.61 சென்டிமீட்டர் உயரம். இந்த பசுக்களை பார்க்க கொரோனா காலத்திலும்கூட பல கிராமங்களில் இருந்து கூட்டம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நலன் புதூர் கிராமத்தில் அரை அடியில் ஒரு கன்றுக்குட்டி பிறந்திருக்கிறது. விஜயன் என்ற விவசாயி குமராட்சி அரசு கால்நடை மருத்துவமனையில் தான் சினை ஊசி போட்டு இருக்கிறார். இதற்கு முன்பு இரண்டு கன்றுகளை அந்த மாடு ஈன்று இருக்கிறது. அந்த இரண்டு கன்றுகளும் வழக்கம்போல் உயரத்தில் இருந்து இருக்கிறது.
மூன்றாவதாக ஈன்ற இந்தக் கன்று மட்டும் அரை அடி உயரத்தில் தான் பிறந்திருக்கிறது. குறைவான உயரத்தில் பிறந்திருப்பதால் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். விவசாயி விஜயன் குடும்பத்தினரும் குழந்தை போல் இருப்பதால் அந்தக் கன்றுவிடம் ரொம்ப பாசமாக நடந்து வருகின்றனர்.
ஆனாலும் அந்த கன்றுக்கு தான் பெரும் சோகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த கன்றுவால் தாய் பசுவுக்கும் சோகம் ஏற்பட்டிருக்கிறது. அரை அடி உயரம் தான் இருப்பதால் அந்த கன்றுவால் தாயிடம் பால் குடிக்க முடியாமல் அவதிப்படுகிறது. தன் பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாத நிலையை நினைத்து தாய்ப் பசுவும் கண்ணீர் வடிக்கிறது. இதை அடுத்து விஜயன் குடும்பத்தினர் கன்றுக்கு பாலூட்ட மாற்று வழியை தேடி வருகின்றனர்.