அன்றாடம் ருசிக்கும் டீ கலப்படமற்றதா என தெரிந்துகொள்ளவேண்டுமா? கண்டுபிடிக்க எளிய வழிமுறைகள்
பெரும்பாலான மக்கள் காலை வேளையில் அதிகமாக தேநீர் தான் பருகும் பழக்க கொண்டவர்கள். ஆனால், அதிகமாக தேயிலையின் தேவை அதிகரிப்பின் காரணமாக கலப்படம் செய்யப்பட்ட தேயிலைகள் அதிமாகி கொண்டு வருகிறது.
மேலும், தேயிலைகளில் பல வகையான கலப்படங்கள் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பழைய தேயிலைகளையே மீண்டும் பொட்டலம் செய்து சந்தையில் விற்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
இதை உட்கொண்டால், கல்லீரலின் கோளாறுகள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும் என சுகாதார நிபுணர்களின் கூறுகின்றனர். எப்படி கண்டறியலாம் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தேயிலை இலைகளில் கலப்படத்தைக் கண்டறிய மிகவும் எளிமையான முறையை அக்டோபர் 21 அன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் ஒரு பேப்பரை எடுத்து, அதன் மீது தேயிலை இலைகளை வைக்கவும். இப்போது அதன் மீது சில துளிகள் தண்ணீரை தெளித்து ஈரப்படுத்தவும். இப்போது இந்த பில்டர் காகிதத்தை குழாய் நீரில் கழுவவும்.
அடுத்து, இந்த வடிகட்டி தாளின் நிறம் மாறியுள்ளதா என்பதை வெளிச்சத்தில் வைத்து பார்க்கவும். இதன்பின்னர், வடிகட்டி காகிதத்தில் கறை இல்லை என்றால் அது உண்மையான தேயிலை இலைகள்.
வடிகட்டி தாளில் கருப்பு-பழுப்பு என கருமையான புள்ளிகள் தோன்றினால், இந்த தேயிலை இலை கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.