ஆயுளை கூட்டும் பழங்கள்.. வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
பொதுவாக நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு பழங்கள் அவசியமானவை.
பலரின் வீடுகளில் மதிய நேரங்களில் பின்னர் தான் பழங்கள் சாப்பிட கொடுப்பார்கள்.
ஆனால் மருத்துவர்கள் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதால் ஏகப்பட்ட பலன் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
இவ்வாறு காலை நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் அளவில்லாமல் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
காலை நேரங்களில் பழங்கள் சாப்பிடுவது என்றால் என்ன பழங்கள் சாப்பிடலாம் என யோசிக்க தோன்றும்.
அந்த வகையில் காலை என்ன மாதிரியான பழங்கள் சாப்பிடலாம். அதில் அப்படி என்ன சத்துக்கள் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
காலையில் சாப்பிடும் பழங்கள்
1. அதிகம் நீரேற்றம் கொண்ட பழங்களில் தர்பூசணியும் ஒன்றாகும். இதில் 92% நீர் சத்து இருக்கின்றது. இரவு சாப்பிட்ட பின்னர் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்போம். இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை இந்த பழம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இதயம் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயற்படும்.
2. வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடலாம், ஏனெனின் பப்பாளியில் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது செரிமானத்திற்கு தேவையான நொதிகளை சுரக்க செய்யும்.
3. காலையில் அன்னாசிப்பழம் சாப்பிடலாம். அன்னாசியில் பொதுவாகவே வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஊட்டசத்துக்களை உள்ளே உறிஞ்சி எலும்புகளை வலுப்படுத்தும்.
4. செரிமானத்திற்கு உதவும் பழங்களில் ஆப்புளும் ஒன்று. பசியைக் கட்டுப்படுத்தி குவெர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவற்றை மூளையின் செயற்பாட்டை கொடுத்து ஆரோக்கியமாக்குகின்றது.
5. பொதுவாக காலையில் சாலட் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் கிவியை கண்டிப்பாக சேர்த்து கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |