சர்க்கரை நோயாளிகள் இந்த 4 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்!
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்க தங்கள் உணவு விடயத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எதையாவது சாப்பிடலாமா வேண்டாமா என்பதை அவர்கள் எப்போதும் மனதளவில் கணக்கிடுகையில், ஒரு புதிய ஆராய்ச்சி நான்கு பழங்கள் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறுகிறது.
குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
சர்க்கரை நோயும் பழங்களும்
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எல்லா காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் பழங்கள் என்று வரும்போது அவை எல்லாமே இனிப்பு வகைகளாக இருப்பதால் எதனை சாப்பிடுவது என பலரும் குழம்புவதுண்டு.
சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை தவிர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல சில வகை பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பது ஆச்சரியமான தகவல்.
நன்கு பழங்கள்
- நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதையும் அளவு அதிகரிப்பதையும் நிர்வகிப்பதற்கும் உணவு முக்கிய காரணி.
- ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிக அவசியமான ஒன்று.
- எடை இழப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் மாம்பழம், அன்னாசி, முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள்.
- இந்த நான்கு பழங்களில் சர்க்கரை அதிகளவு நிறைந்துள்ளது.