நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் பழங்கள்: இரத்த சக்கரையை குறைக்குமா?
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. இதனால் பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதில் மிகவும் முக்கியமானது நீரிழிவு நோய். இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஒரு நிலை.
இந்த நோயை அவ்வளவு சீக்கிரமாக உடலை விட்டு அனுப்ப முடியாது. ஆனால் சரியான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுமுறை மிகவும் முக்கியமானது. சரியான உணவுமுறை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆற்றலையும் கொடுக்கும்.
அந்த வகையில் நீரிழிவு நோயாளர்களுக்கு சில பழங்கள் நிவாரணியாக உள்ளது. அது பற்றிய முழ விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரிழிவு நோயின் நிவாரண பழங்கள்
பெர்ரி | நீரிழிவு நோயாளிகளுக்கு ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி போன்ற அனைத்து வகையான பெர்ரிகளும் நன்மை பயக்கும். பெர்ரி பழங்கள் ஒரு வகையான நல்ல பழங்களின் இனமாகும். ஏனெனில் அவற்றில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. |
கொய்யா | கொய்யாவில் ஏராளமான நார்ச்சத்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்காது. கொய்யாவில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. |
கிவி | கிவி வைட்டமின் சி-யின் நல்ல மூலமாகும். இதில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. இவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது தவிர, இது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமானது. |
ஆரஞ்சு | நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரஞ்சு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளின் இனிப்பு பசியைஇல்லாமல் செய்கிறது. இதில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது நீரிழிவு நோய்க்கு நன்மை தரும். |
பப்பாளி | நீரிழிவு நோயாளிகளுக்கு பப்பாளி மிகவும் நன்மை தரும். தினமும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால், உங்கள் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும். |
நீரிழிவு நோயாளர்கள் எந்த பழங்களை சாப்பிட கூடாது?
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம், திராட்சை, மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற இனிப்புப் பழங்களை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். இவற்றில் அதிக அளவு இயற்கை இனிப்பு உள்ளது. இதனால் இரத்த சக்கரையின் அளவை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |