தினமும் இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் போதும்.. ஆண்மையின் தரம் அதிகரிக்குமாம்!
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க பல உணவுகளை எடுத்துகொண்டாலும், அத்திப்பழத்தில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் ஊற வைத்து சாப்பிடும் போது கிடைக்கின்றன. மேலும், வீரியத்தை அதிகரிக்க இரவில் 1-2 உலர்ந்த அத்திப்பழத்தை ½ கப் தண்ணீரில் ஊறவைத்து, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடவும்.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்கள். பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை அத்திப்பழத்துடன் சேர்த்து சில ஊறவைத்த கொட்டைகளையும் சேர்த்துகொள்லாம். அத்திப்பழத்தில், அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை சரிபார்க்கிறது. இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் டைப் -2 நீரிழிவு நோயிலும் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும், அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கங்களை பராமரிக்க உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படும் மக்கள் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கியமான குடலை பராமரிக்கலாம்.
கால்சியத்தை நல்ல அளவில் வழங்குவதன் மூலம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க அத்திப்பழம் உதவுகிறது.