ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த குட்டி விஜய்யை ஞாபகம் இருக்கா: இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஆரம்பித்த பரத் தற்போது எப்படி இருக்கிறார் என தெரியுமா?
பரத் ஜெயந்த்
விஜய், தேவயாணி, சூர்யா மற்றும் வடிவேலு என இன்னும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ப்ரண்ட்ஸ். இந்த திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளியாகி வசூலிலும் பெரிய சாதனைப் படைத்திருந்தது.
இத்திரைப்படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்த பரத் ஜெயந்த் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். மேலும், அவர் வானத்தைப்போல, பிரியமான தோழி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
பின்னர் சினிமாவில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார். படிப்பு முடித்ததும் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்ற திரைப்படத்திற்கு நடித்திருந்தார்.
பிறகு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார்.
தற்போதைய நிலைமை
இந்நிலையில் தற்போது தனக்கென சொந்தமாக ஐஸ்கிறீம் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவர் பிரத்தியே யூடியுப் சேனல் ஒன்றில் பேசிய போது அவர் தன்னைப்பற்றி பல விடயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
அதில் அவர், சிறிய வயதில் எனக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும். அதுதான் எல்லாத்துக்கும் காரணமாக அமைந்தது.
கடைக்கு போனா ஒன்று அல்லது இரண்டு தான் சாப்பிடுவோம். ஆனால், இது என் சொந்த கடை. இன்னும் ஐஸ் கிரீம் மீதுள்ள பிணைப்பு போகவில்லை.
சிறிய வயதிலேயே ரசிகர் கூட்டங்களை பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் சினிமா மீது இருந்த ஆர்வம் குறைய துவங்கியது.
பள்ளியை முடித்த பிறகு எனக்கான வாய்ப்புகளும் குறைந்தன. அப்போது எனக்கென தனியாக ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தேன்.
விஸ்காம் முடித்த பிறகு, எம்பிஏ படித்தேன். அதன்பிறகு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன்பிறகு தான் இந்த கடையை ஆரம்பித்தேன்.
பிறகு இப்போதும் சிறிய ரோல்களில் நடிக்க அழைப்பு வருகிறது. குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் போதுமானது.
தொழிலை விட்டுவிட்டு செல்ல முடியாது. அதே நேரத்தில் தொழிலை மேம்படுத்திவிட்டு மீண்டும் சினிமாவுக்குள் நுழைவேன்" என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்