அட இவங்களா? விஜய்யின் ரீல் தங்கை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
பிரண்ட்ஸ் படத்தில் சிறுவயது விஜய்யின் தங்கையாக நடித்த அணுவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய்
தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக நடிகர் தான் விஜய்.
இவர் இன்றும் ரசிகர்களின் தளபதியாக வாழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் நேற்றைய தினம் அவரின் 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் பற்றி செய்திகள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, விஜய் இருவரும் நண்பர்களாக இணைந்து நடித்த திரைப்படம் தான் பிரண்ட்ஸ்.
அணு கிருஷ்ணனின் தற்போதைய நிலை
அந்த படத்தில் பிளாஸ் பேக் காட்சியில் விஜய்யின் தங்கையாக அணு கிருஷ்ணன் நடித்திருப்பார்.
விஜய்யின் தங்கையாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட அணு, ஹிந்தியில் ஒளிபரப்பான மஹாபாரதம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் மீண்டும் தளபதியின் தங்கையாக நடித்திருக்கிறார்.
கத்தி படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் கமிட்டாகி இருக்கிறார் என தகவல் வெளியாகி நிலையில், தாலி, இளமை, வெங்காய வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |