வெறும் 3 பொருட்கள்! வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் குடும்ப கஷ்டங்கள் நீங்கும்
வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டாலே மன நிம்மதி இருக்காது, குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே மன உளைச்சல் அதிகரிக்கும்.
இதனால் தூக்கம் பாதிக்கப்பட்ட வேறு பல பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ளும், வெளியே வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் நிம்மதி இல்லாமல் போய்விடும்.
இப்படி குடும்ப கஷ்டங்கள் நீங்கி மன நிம்மதி பெற வெள்ளிக்கிழமை தோறும் மிக எளிமையான பரிகாரத்தை செய்து வரலாம்.
தர்ப்பை, உப்பு, கடுகு- பரிகாரம்
வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை தன்னுள் கிரகிக்கும் தன்மை பெற்றது தர்ப்பை. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் தூபக்கால் அல்லது மண்சட்டி வைத்துக் கொண்டு அதில் நாலைந்து தர்ப்பைப் புல்லை போட்டுக் கொள்ளுங்கள்.
தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் கல் உப்பும், கடுகும் சிறிய அளவில் போட்டுக் கொள்ளவும்.
தர்ப்பை உடன் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் ஜாக்கிரதையாக இருங்கள்! இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
செல்வ வளம் பெருக பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும்.
அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும்.
இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.
தயவு செய்து பூஜை அறையில் இந்த சாமி படங்களை மட்டும் வைக்காதீர்கள்!!
