இலவச சேலை வாங்க சென்ற பெண்கள்! பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்
தமிழகத்தில் திருப்பத்தூர் பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக புடவை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இலவச சேலைக்கு அலைமோதிய மக்கள்
தைப் பூசம் என்பது இந்திய மாநிலம் தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வாகவே இருக்கின்றது. இந்த நாளில் புடவையை தானமாக கொடுப்பதாக பிரபல தனியார் அறிவித்துள்ளது.
சாதாரணமாக இலவசம் என்றாலே அந்த இடத்தில் மக்களின் கூட்டமும் தாறுமாறாக எகிறும். இதே போன்று குறித்த நிகழ்விற்கும் கூட்டம் எகிறியதால், கூட்டத்தில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் மயக்கம் அடைந்ததாகவும் இதில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.