1400 கிலோ மீட்டர் பயணம் செய்து... முகத்தில் விநோதமான டாட்டூவை வரைந்த பெண்; காரணம் என்ன?
பொதுவாக டாட்டூ போட்டுக்கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு வழக்கமான ஒன்று. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி யாரும் அறிவதில்லை.
உலக நாடுகளில் பல மக்கள் டாட்டூ போட்டுக்கொள்ள பெரிதும் விரும்புகின்றனர். சிலர் வித்தியாசமாக கண்களில் டாட்டூ வரைவது, உடல் முழுவதும் வரைந்துகொள்வது என அதிர்ச்சியை ஏற்படுத்துவார்கள்.
அந்த வகையில், இளம்பெண் ஒருவர் முகத்தில் தழும்பு போன்ற வடிவில் டாட்டூ போட்டுக்கொண்டு 1400 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த டெய்சி லவ்சிக் என்ற நபர் புதுமையான டாட்டூவான Freckle வரைவதில் பிரபலமடைந்தவர்.
இவர் பலருக்கும் முகத்தில் தோன்றும் தழும்பை மறைக்க டாட்டூ போட்டுவிடுவதுதான் வேலையாக இருந்து வருகிறார்.
இதனால், 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து மைக்கேலா என்ற பெண் பிரிஸ்பேனிற்கு பயணித்து வந்திருக்கிறார்.
இதனையடுத்து, முகப்பருவால் வரும் ஆக்னே தழும்புகளை பெரும்பாலும் பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
ஆனால், மைக்கேலா தனக்கு அதுப்போன்ற தழும்புகள் இல்லை என்பதால் அதனை செயற்கையான முறையில் ஏற்படுத்திக் கொள்வதற்காக டாட்டூவாக போட்டுக்கொள்ள துணிந்து முடிவெடுத்து இருக்கிறார்.
அதேப்போல், டெய்சி மைக்கேலாவின் முகத்தில் மினி-ஹார்ட் ஷேப்பில் வரைந்துள்ளனர். இதனை சமூக வலைத்தளத்தில் கண்ட நெட்டிசன்கள் ஏதோ குரங்கு அம்மை நோய் போல் உள்ளது முகம் ஏன் இப்பட்டி ஒரு முடிவு என விமர்சித்துள்ளனர்.