தடுப்பூசி செலுத்திக்கொண்டால் போதும் சுற்றுலா வரலாம்; அழைப்பு விடுத்த நாடு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆனது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பலரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு வலியுறுத்திவருகிறது.
அந்த வகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் நாடு வெளியிட்ட தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளா்த்தப்படுகிறது. இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் சுற்றுலா வர அனுமதிக்கப்படுவாா்கள்.
சுற்றுலா வருவாயை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பிரான்சுக்கு சுற்றுலா வந்தால் அவா்கள் தனிமைப்படுத்தப்படமாட்டாா்கள்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இரண்டையும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.