மணமக்களை பின்னுக்கு தள்ளி கியூட்டாக போஸ் கொடுத்த நாய்! என்ன நடந்தது தெரியுமா?
திருமணத்தில் மணமக்களை பின்னுக்கு தள்ளி போஸ் கொடுத்த ஹென்றி என்ற நாய் தற்போது வைரலாகி வருகிறது.
திருமணத்தில் எப்பொழுதும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மணமகனும்,மணமகளுமே. அண்மையில் நடந்த திருமண விழா ஒன்றில் திருமண ஜோடிகளையே பின்னுக்கு தள்ளி வைரலாகி கொண்டிருக்கிறது ஒரு புகைப்படம்.
நீங்கள் நாயை வளர்ப்பவர்களா? ஆம் என்றால் நிச்சயம் அந்த நாய் இல்லாமல் எதையும் செய்யமாட்டீர்கள்.
எங்கே போனாலும் கூட்டி செல்வது முதல் அன்றாடம் விளையாடுவது வரை நீங்கள் திருமணம் செய்வதாக இருந்தாலும் அந்த இடத்தில் அந்த நாய்க்கு தான் முதலிடம் நிச்சயம் என்றே சொல்லலாம்.
எந்த ஒரு செல்லப்பிராணிகளை எடுத்து கொண்டாலும், மனிதர்களிடையே எளிதில் ஒட்டிக்கொள்ளும். அதில் ‘நாய்’ சொல்லவே தேவையில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மோதிரம் கொண்டு வந்த நாய் அங்கு இருந்த திருமண ஜோடிகளையே மிஞ்சும் அளவுக்கு மொத்த அழகையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
அந்த புகைப்படத்தில் திருமணம் செய்துகொள்ளும் அந்த திருமண ஜோடியின் அழகையே, ஹென்றி கைப்பற்றி கொண்டது. காரணம் ஹென்றி கொடுத்த ரியாக்சன் தான் காரணம்.

“ஹென்றி நீ அவ்வளவு அழகு, நீ தான் என்னுடைய திருமணத்தில் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டாய் என்றும், எப்படி எங்களின் திருமண நிகழ்ச்சியில் அவ்வளவு அழகையும் திருடினாய்’ என்றும் ட்விட்டரில் அதன் உரிமையாளர் ஷேர் செய்துள்ளார்.