140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதைப்படிவம்! மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்
உலகிலேயே மிகப்பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான நிஞ்ஜாட்டியன் சபாடாய் என்ற வகையை சேர்ந்த டைட்டனோசரின் தொல்பொருள் புதைப்படிவத்தை அர்ஜெண்டினாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்தைக்கொண்ட இந்த டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த டைனோசரின் முழுமையடையாத எலும்புக்கூடுதான் நெயுக்யூனின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை டைனோசர்கள்தான் முதன்முதலில் அழிந்துபோனவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சி எழுத்தாளரான பப்லோ கல்லினா இதுபற்றி கூறுகையில், டைனோசர்களின் புதைபடிவங்கள் உலகில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதற்குமுன்பு பழமையானது எனது பதிவுசெய்யப்பட்ட டைனோசரைக் காட்டிலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைபடிவம் உலகிலேயே மிகவும் பழமையானது.
இந்த டைனோசர்கள் மிகவும் பெரிய உருவம் கொண்டவை என்றும் பப்லோ குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டைட்டனோசரின் எலும்புக்கூடை வைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.