நடிகை சாந்தினி கருக்கலைப்பு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கடந்த 20 ஆம் தேதி காலை அவர் பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கார் மூலமாக விசாரணைக்காக சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை முடிந்ததும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை செய்ய தமிழக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட வழக்கில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அந்த நிபந்தனை ஜாமீனில், இரண்டு வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், மணிகண்டன் தனது பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை அழைக்கும் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.