உலோகப் பெட்டியில் அடைத்து வைக்கப்படும் மக்கள்: கொரோனாவால் சீனாவில் அரங்கேறும் கொடுமை
சீனா தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் (zero Covid policy) மூலம் கோவிட்-19 தொற்றுநோயை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.
அந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, கோவிட் -19 நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் வந்தவர்கள் என இவர்கள் அனைவரும் சிறிய உலோகப் பெட்டிகளில் தங்கி தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகி வரும் நிலையில், கோவிட்-19 பரவுவதைத் தடுக்க ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் பல வித கடுமையான சோதனைகளும் விதிக்கப்படுகின்றன.
இது குறித்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. Xi'an, Anyang மற்றும் Yuzhou ஆகிய இடங்களைப் பற்றி இந்த வீடியோக்களில் காண்பிக்கப்பட்டுள்ளன.
ஓமிக்ரானால் (Omicron) சிலர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு பகுதியில் ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள அனைவரும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அல்லது முதியவர்கள் என யாராக இருந்தாலும், அனைவரும் நெரிசலான பெட்டிகளில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பெட்டிகளில் ஒரு மர படுக்கை மற்றும் கழிப்பறையும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் இந்த வரையறுக்கப்பட்ட இடங்களில் இரண்டு வாரங்கள் வரை தங்க வேண்டியிருக்கிறது என அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பிறகு, மக்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் சீனாவின் கடுமையான பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளன. சீனாவின் லூனார் புத்தாண்டு மற்றும் அடுத்த மாதம் சீனாவில் துவங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன் தொற்றை அகற்றுவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.
Millions of chinese people are living in covid quarantine camps now!
— Songpinganq (@songpinganq) January 9, 2022
2022/1/9 pic.twitter.com/wO1cekQhps