ஆரோக்கிய காலையுணவு: மணக்க மணக்க மல்லி தழை சாதம்
மல்லித்தழையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துகள், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின் கே மற்றம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது.
காலையிலோ சரி பகலைக்கோ சரி சத்தான ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மல்லி தழை சாதத்தை கண்டிப்பாக சமைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவை அட்டகாசம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி – ஒரு கப்
- பட்டை – 1
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 1
- அன்னாசி பூ – 1
- பிரியாணி இலை – 1
- பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (கீறியது)
- கேரட் – 2 நறுக்கியது
- பீன்ஸ் – ஒரு கப் (நறுக்கியது)
- வேகவைத்த பச்சை பட்டாணி – ஒரு கப்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 2 ஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- நெய்யில் வறுத்த முந்திரி – 15
- மசாலா விழுது அரைக்க
- தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி இலை – ஒரு கப்
- புதினா இலை – ஒரு கப்
- சின்ன வெங்காயம் – 5
- பூண்டு – 5 பல்
- இஞ்சி – சிறிய துண்டு
- பச்சை மிளகாய் – 4
- தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
செய்முறை
முதலில அரிசியை கழுவி தண்ணீரில் ஊற வகை்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், உப்பு மற்றும் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைத்து, சாதம் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸியை எடுத்து அதில் கொத்தமல்லி இலை, புதினா இலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து மை போல அரைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக பொன்னிறத்தில் வதங்கியவுடன் கேரட், பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வேகவைக்கவேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்த பின்னர்,அரைத்த மசாலா விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும். பின்னர் தண்ணீர் வற்றியதும், வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். இதன் பின்னர் இதை உங்களுக்கு ஏற்ற வகையில் அலங்கரித்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |