மகிழ்ச்சியாக பாலத்தில் நடந்துவந்த மக்கள்! நொடிப்பொழுதில் அரங்கேறிய அசம்பாவிதம்
மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், பாலம் ஒன்றில் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்து விபத்தாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகாவில் தொங்குபாலம்
மெக்சிகோவின் குர்னவாகா நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் திறக்கப்பட்டது. சம்பவத்தின் போது, மேயர் மற்றும் பலர் உடனிருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் மரப் பலகைகளால் ஆனது. பாலத்தின் உலோக சங்கிலிகள் சமீபத்தில் மறுவடிவமைக்கப்பட்டன.

விபத்துக்குள்ளாகி காட்சி
இந்நிலையில், மெக்சிகோவின் இந்த தரைப்பாலம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில், துரதிஷ்டவசமாக பாலம் சரிந்தபோது, மேயர் மற்றும் சுமார் இரண்டு டஜன் பேர் சுமார் 3 மீட்டர் (10 அடி) பள்ளத்தில் விழுந்தனர்.
ஓடை படுகையில் பாறைகளும், கற்களும் இருந்தன. அதன் மீது விழுந்ததால் காயமடைந்தவர்களில் நகர சபை உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் அதிகாரிகளும் அடங்குவர்.
பலகைகள் சங்கிலிகளில் இருந்து பிரிந்ததில் பிறகு சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேயர் ஜோஸ் லூயிஸ் யூரியோஸ்டெகுயின் மனைவி மற்றும் நிருபர்கள், பாலம் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மக்களில் அடங்குவர் என்றும் கூறப்படுகின்றது.
#Cuernavaca Mayor and other officials during the reopening of a pedestrian bridge. #México pic.twitter.com/wcNe48vhCA
— David Wolf (@DavidWolf777) June 7, 2022