வெயில் காலத்தில் இந்த உணவுகளை ஒதுக்கியே வச்சிக்கோங்க...
கோடை காலங்களில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலம்
கோடையில் கத்திரி வெயில் ஆரம்பமாக உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் வெயிலால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அதிலும் ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் என அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன், உடல் வெப்பத்தினால் அவதிப்படுகின்றனர்.

இம்மாதிரியான காலங்களில் சரியான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது? என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த உணவுகளை தவிர்க்கணும்?
புளிப்பு மற்றும் காரம் அதிகம் உள்ள குழம்பு வகைகளான புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடல் சூட்டையும், பித்தத்தினையும் அதிகரிக்கின்றது. ஆதலால் வெயில் காலங்களில் இதனை தவிர்க்கவும்.
காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நீர் கடுப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

வெயில் காலங்களில் அதிகமாக எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். தேநீர் குடிப்பது பித்தத்தினை அதிகரிக்கும். ஆகவே முடிந்த அளவு தேநீர் குடிப்பதை தவிர்ப்பது சிறந்தது.
கடைகளில் விற்கப்படும் ஃபாஸ்ட்புட் வகைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மைதா உணவுகள், சைனீஸ் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

வெங்காயத்தையும் மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கந்தகம் அதிக வெப்பத்தை உண்டாக்கக்கூடியதுடன், வாயு பிரச்சனை, வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல் இவற்றினை ஏற்படுத்தும்.
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த இஞ்சி மற்றும் பூண்டு இவை இயற்கையாகவே அதிக வெப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. இதில் உள்ள அலிசின் போன்ற சேர்மங்கள், ரத்த ஓட்டத்தை தூண்டுகின்றது. இதனால் வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்க செய்கின்றது. ஆதலால் அளவோடு எடுத்துக் கொள்ளவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |