இந்த ஆரோக்கிய பிரச்சினை இருக்கா? டீ ,காபி கூட இந்த 4 உணவை தவறியும் சாப்பிடாதீங்க
பொதுவாக காலையில் நாம் தூங்கி எழும் போது, வயிறு காலியாக இருப்பதால் நாம் முதலில் என்ன சாப்பிட்டாலும் அது நேரடியாக வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.
எனவே தான் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்க கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதே ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று எச்சரித்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அதனுடன் சேத்து சாப்பிடவே கூடாத சில உணவுகளை நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இது நாளடைவில் பாரிய ஆரோக்கிய பிரச்சினைக ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது. அந்தவகையில், நாம் டீ, காபியுடள் ஒருபோதும் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவான விளக்கத்துடன் அறிந்துக்கொள்ளலாம்.
டீ ,காபி கூட சாப்பிடவே கூடாத உணவுகள்

1.பொதுவாக டீ மற்றும் காபியில் சர்க்கரை சேர்த்து தான் குடிப்போம். அதனுடன் வெறும் மைதா மற்றும் அதிக சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட், ரஸ்க், போன்ற சிற்றுண்டி உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது, உடலில் ரத்த சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
இது நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும். அதுமட்டுன்றி செரிமான கோளாறுகளுக்கும் வழிகோலும்.

2. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை ஒருபோதும் டீ, காபியுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளவே கூடாது.
குறிப்பாக பேரீச்சம் பழம், கீரை, முளைக்கட்டிய பயறு, போன்றவற்றில் இருக்கும் non heme iron என்ற இரும்புச்சத்துக்களை குடல் உறுஞ்சுவதை டீயில் உள்ள டானின் எனும் வேதிப்பொருள் 60 சதவீதம் வரையில் தடுக்கின்றது.
இது இறைச்சி வகையில் காணப்படும் heme iron க்கு பொருந்தாது. காபியில் உள்ள காபின் டீ அளவுக்கு இல்லாவிட்டாலும் 25 தொடக்கம் 30 சதவீதம் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கின்றது. இந்த பழக்கம் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

3. எண்ணெய் பலகார வகைகளாக பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
இது செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனை எப்போதாவது சாப்பிடுவது பிரச்சினை கிடையாது ஆனால் வாடிக்கையான இந்த பழக்கத்தை கொண்டிருப்பது அபாயாரமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு கொண்டுசெல்லலும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

4. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மற்ற பால் பொருள்கள் எடுப்பதைத் தவிர்த்து விடலாம்.
ஏனெனில் காலை வேளையில் டீயுடன் மற்ற பால் பொருள்களும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது அது கூடுதலாக மந்தமாக்கும். அதனால் பால், பனீர், தயிர், க்ரீம் போன்ற பால் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |