இந்த உணவுகளுடன் எலுமிச்சையை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து... எதிராக மாறும் பக்கவிளைவுகள் என்னென்ன?
பொதுவாகவே நாம் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக தெரிவு செய்து சில உணவுகளை உண்ணுவோம் ஆனால் அவற்றின் கலவை உடலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
அப்படி அதிக நன்மைகள் கொண்ட எலுமிச்சையை ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று சில உணவுப் பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சையுடன் சாப்பிட கூடாதவை
எலுமிச்சை பொதுவாகவே அதிக அமிலத்தன்மை நிறைந்தது. அதனால் காரமான உணவுகளில் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் உணவின் சுவை அப்படியே மாறிவிடும். மேலும், காரத்தன்மை அதிகம் கொண்ட காய்கறிகளுடன் எலுமிச்சைச் சாறு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடல் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை சேர்த்து சாப்பிடும் போது மீனின் சுவையை சிட்ரஸ் சுவை மாற்றிவிடும்.
இனிப்பான பழங்களை சாப்பிடும் போது எலுமிச்சையில் இருக்கும் புளிப்பு மற்றும் கசப்பு சுவை இனிப்பான பழத்தின் சுவையை கசப்பாக மாற்றிவிடும். இவ்வாறு எலுமிச்சையுடன் பழங்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சமாக தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை கீரை மற்றும் காரமான உணவுடன் சாப்பிடும் போது பச்சை நிறத்தில் இல்லாமல் கருமை நிறத்திற்கு மாறிவிடும்.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பால் பொருட்களுடன் சேர்க்கப்படும்போது அத்துடன் வினைபுரிந்து திரிந்து போகும். மேலும் இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |