கோடை காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்காதீங்க... வெப்பம் மேலும் அதிகரிக்குமாம்
கோடை காலங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை வெயில்
கோடையில் கத்திரி வெயில் ஆரம்பமாக உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் வெயிலால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அதிலும் ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் என அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன், உடல் வெப்பத்தினால் அவதிப்படுகின்றனர்.
இம்மாதிரியான காலங்களில் சரியான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம்? எந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது? என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்
வெப்ப காலங்களில் நமக்கு அதிகமான நீர்ச்சத்து தேவைப்படுவதால் குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
அதே போன்று தண்ணீர்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஜுஸ், கிர்ணி பழம், நுங்கு, இளநீர் போன்ற பானங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் உடல் குளிர்ச்சியினை கொடுக்கின்றது.

நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கேரட், முள்ளங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துக்கொண்டால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

Ice Biryani என்று அழைக்கப்படும் பழைய சாதத்தினை காலை உணவாக சாப்பிடுவது சிறந்தது. உங்களது உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன?
வெயில் காலங்களில் அதிகமான காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மிளகாயில் உள்ள கேப்சைனின் உடல் வெப்பத்தினை தருகின்றது.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், மசாலா அதிகம் நிறைந்த சிக்கன் இவற்றினை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
கீரைகள் சிறுநீரகங்களை கடினமாக வேலை செய்ய வைக்கும் என்பதால், பாலக்கீரை போன்ற கீரைகளை குறைவாக எடுத்துக் கொள்ளவும். செரிமான அமைப்பு வேலை செய்வது தாமதப்படுகின்றது. அதே போன்று மாம்பழத்தையும் குறைவான அளவு சாப்பிடுவது சிறந்தது.

வெங்காயத்தையும் மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கந்தகம் அதிக வெப்பத்தை உண்டாக்கக்கூடியதுடன், வாயு பிரச்சனை, வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல் இவற்றினை ஏற்படுத்தும்.

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த இஞ்சி மற்றும் பூண்டு இவை இயற்கையாகவே அதிக வெப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. இதில் உள்ள அலிசின் போன்ற சேர்மங்கள், ரத்த ஓட்டத்தை தூண்டுகின்றது. இதனால் வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்க செய்கின்றது. ஆதலால் அளவோடு எடுத்துக் கொள்ளவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |