உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எந்த உணவுகளை சாப்பிடலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள் ஆகும். இவை இயற்கையாகவே நமது உடம்பில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாகும் போது உயிரை பறிக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது. இன்றைய வாழ்க்கை முறை, ஜங்க் ஃபுட், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையினால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கின்றது.
அந்த வகையில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்
ஆலிவ் ஆயில், எள் எண்ணெய், வேர்க்கடலை இவற்றினை சாப்பிடுவதால் LDL என்ற கெட்ட கொழுப்பு குறைந்து, HDL என்ற நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவும். மேலும் இவை இதய அரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது கெட்ட கொழுப்பு குறைந்து, உடல் ஆரோக்கியத்தை அளிக்கின்றது. ஓட்ஸ், பார்லி மற்றும் பீன்ஸ், ஆப்பிள், பேரிக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்களான சால்மான், கெளுத்து, டரவுட் போன்ற மீன்களை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு இருமுறை எடுத்துக் கொள்வதால் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.

இதே போன்று பூண்டு மற்றும் பருப்பு வகைகள் கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகின்றது. குறிப்பாக கல்லீரலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கின்றது.

சோயாபால் குடிப்பதால் உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடுக்கப்படுகின்றது. உடம்பில் கொலஸ்ட்ராலை சமநிலையாக வைக்கவும் உதவுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |