பெண்களே விட்டு விட்டு மாதவிடாய் வருதா? இதற்கு இந்த சின்ன விதைகள் போதும்
மாதவிடாய் சக்கரம் ஒழுங்கின்றி அமைவதால் உடலில் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர் பெண்கள் சில விதைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த சிரமத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.
அதிக ரத்த போக்கு பிரச்சனை உடல் சோர்வு இருந்தால் கட்டாயம் அவர்கள் அன்றாட உணவில் புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்துக்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனைக்கான தீர்வை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மாதவிடாய்
முதிலில் பெண்களுக்கு மாதவிடாய் வரும் சமயத்தில் அவர்கள் தினமும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமாகும்.
அதனால் சமையலில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு போன்ற மூலிகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதனால் உடலிலுள்ள நஞ்சுக்கள் வெளியேறி, ரத்தமும் சுத்தமடையும். மாதவிடாய் விட்டு விட்டு வருபவர்கள் அதிகமாக வெங்காயத்தை உட்கொள்ளலாம்.
ஆனால் இதை கர்பிணிகள் அதிகமாக உட்கொள்ள கூடாது. மாதவிடாய் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்க கூடிய சிறிய விதைகள் அதாவது கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை சேர்த்து கொள்வத மிகவும் நன்மை தரும்.
ஈஸ்ட்ரோஜன் அளவுகளை வெளியேற்ற செய்வதில் ஆளி விதைகள் சிறந்த நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |