சின்ன வெங்காயத்தை மூலநோயுள்ளவர்கள் சாப்பிடலாமா? ஆய்வுகளின் வெளிச்சம்
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவிக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் பைல்ஸ்.
மலம் வெளியேறும் துவாரம் இறுக்கமாக இருக்கும் பொழுது இரத்த நாளங்கள் தளர்வடையும். இதன்போது ஏற்படும் நோய் பைல்ஸ் என அழைக்கப்படும்.
இந்த பிரச்சினை ஆரம்பிக்கும் போதே உரிய மருத்துவரை பார்த்து சரிச் செய்து கொண்டால் நல்லது. இதனை கவனிக்காமல் விடும் பட்சத்தில் நோய் முற்றி அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லும்.
மேலும் மூல நோயை சில உணவுகளால் கட்டுபாட்டில் வைக்க முடியும்.
அந்த வகையில், மூலநோயை குணப்படுத்தும் உணவுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மூல நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்
1. மூல நோய் உள்ளவர்கள் இரவு வேளைகளில் வெந்தயம் கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் வெந்தயத்திலிருக்கும் நார்ச்சத்து மல போக்கை இலகுப்படுத்திக் கொடுக்கும்.
2.பச்சை காய்கறிகளில் கலோரிகள் பெரிதாக இல்லை, மாறாக நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
உதாரணமாக ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முள்ளங்கி, டர்னிப் மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளை கூறலாம்.
3. மூல நோயுள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வெந்தீர் குடித்து வர வேண்டும். இந்த வைத்தியம் நிச்சயம் பலன் கொடுக்கும். மேலும் சின்ன வெங்காயம் கலந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
4. வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை மலச்சிக்கலை குறைக்கிறது.
5. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை, நட்சத்திரபழம் ஆகிய நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.
6. நீராவியால் செய்யப்படும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் இந்த உணவுகள் மலம் கெட்டியாவதை தடுகிறது.
7. பிரவுன் ரைஸ், கம்பு, ஓட்ஸ், பயறு போன்ற முழு தானியங்களை சாப்பாட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் மலச்சிக்கலை கணிசமாக குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |