கல்லீரல் பாதிப்பால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்போ கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் உடலிலுள்ள உறுப்புக்களை பழுதடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை அடிப்படையாக வைத்தே உடலின் ஆரோக்கியம் கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில், உடலில் பல வேலைகளை செய்து ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் உறுப்பு தான் கல்லீரல்.
இதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடலில் பல செயற்பாடுகள் முறையாக நடைபெறாது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றும் வேலையை கல்லீரல் தான் பார்க்கிறது.
இப்படியான வேலைகளை செய்வதற்கு கல்லீரலுக்கு பல புரதங்கள் மற்றும் கொழுப்புகள் தேவைப்படுகிறது.
இதன்படி, கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
மனித உடலில் அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கல்லீரல் சீராக இயங்க வேண்டும். கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது உடலின் முக்கிய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வளவு சிறப்புக்களை கொண்ட கல்லீரலை பாதுகாப்பதற்கு சில உணவுகள் இருக்கின்றன. அதனை உணவுடன் சேர்த்து கொள்வதால் கல்லீரலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது.
1. கல்லீரலை பலப்படுத்தும் உணவுகளில் பூண்டு முக்கிய இடத்தை பிடிக்கின்றன. ஏனெனின் பூண்டில் இருக்கும் செலினியம் என்ற கனிமம் கல்லீரல் சம்மந்தபட்ட பாதிப்புகள் வராமல் தடுக்கிறது. அத்துடன் பூண்டில் அல்லிசின், வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது கல்லீரலை சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறது.
2. வாரத்திற்கு 2 முறை சரி பீட்ரூட் சாப்பிட வேண்டும். இந்த காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்கிறது. ஏனெனின் பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அதே சமயம் பீட்ரூட் கல்லீரல் சம்மந்தப்பட்ட கோளாறுகளை உடலுக்குள் வர விடாமல் தடுகிறது.
3. கல்லீரலை பாதுகாக்கும் பழங்களில் திராட்சை முதல் இடத்தை பிடிக்கிறது. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும். கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் திராட்சைக்கு உள்ளது. குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |