ஹைப்போ தைராய்டிசம் பிரச்னையா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்
இன்றைய காலகட்டத்தில் தைராய்ட் ஒரு உலக வியாதியாக மாறிவருகின்றது.குறிப்பாக பெண்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கழுத்தின் கீழ் பகுதியில், பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு சுரப்பியே தைராய்டு. அதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால் தான், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
இல்லையென்றால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுவதுடன் உடல் பருமனில் தொடங்கி மூட்டு வலி வரை பல்வேறு உடல்சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்.
இது தொடர்பான உடற் பிரச்சினைகள் குறித்தும் இதனை தவிர்க்க எந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹைபோதைராய்டிசம்
தைராய்ட்டு ஹார்மோனில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இதனால் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகள் குறையத் தொடங்குகிறது.பெண்களாக இருக்கும்பட்சத்தில் மாதவிடாய்க் கோளாறுகளும் ஏற்பட வழிவகுக்கும்.
மெட்டபாலிஸம் குறைவதால் பகல் நேரங்களில் சோர்வாக காணப்படுவார்கள் அதுமட்டுமின்றி ஹைப்போதைராய்டிசமால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கப் பிரச்சனையாலும் அவதிப்படுவார்கள்.
இவர்கள் குளூட்டன் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குளூட்டன் அதிகமுள்ள பிரெட், கோதுமை, பிஸ்கட், பாஸ்தா போன்றவற்றிலும், கோதுமை, பார்லி, போன்ற பிற தானியங்களிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள பசையம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தைராய்ட் பிரச்சினை இருப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதால் அவர்களின் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.
தீர்வு கொடுக்கும் உணவுகள்
ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகள் உடலின் செயல்பாட்டுக்கும் தைராய்டு ஹார்மோனின் செயல்பாட்டுக்கும் பெரிதும் உதவும்.
ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமுள்ள உணவுகள் மற்றும் காய்கறிகள் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் இதுபோன்ற ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமுள்ள உணவுகள் தைராய்டு சுரப்பை அதிகரிக்கும்.
வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இதுதவிர, கடல் உணவுகள், பால் உணவுகள், முட்டை போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
செலினியம் செலினியம் என்ற கனிமம் தைராய்டு சுரப்பின் அளவை சரிசெய்யக்கூடியது. சூரியகாந்தி விதை, உலர் கொட்டைகள், மீன், கோழி இறைச்சி, சிவப்பு அரிசி, பீன்ஸ், காளான், பூண்டு ஆகியவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.
டைரோசின் இது ஒரு அமினோ அமிலம். இது டி3 மற்றும் டி4 என்ற தைராய்டு சுரப்பை சரிசெய்கிறது. இறைச்சி வகைகள், சீஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் தைராய்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |