உடற்பயிற்சியின் பின் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஒக்சிஜன் கிடைக்கிறது.
தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி என்பது உடற்தகுதியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும், ஒரு தீவிரமான உடற்பயிற்சியை முடித்த பிறகு, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் அதீத கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
உடற்பயிற்சியின் பின் உண்ணவேண்டியவை
மீன் மற்றும் கோழி போன்ற ஒல்லியான இறைச்சியில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, நியாசின், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் மெலிந்த தசைகளை சரிசெய்ய உதவுவதோடு, அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக இருக்கின்றது. இலை காய்கறிகளில் அதிக அளவு நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பொற்றாசியம் மற்றும் கல்சியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வலிமை மற்றும் சுறுசுறுப்பை மேம்படுத்த உதவுகின்றன.
காய்கறிகளில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால் அவை இதயத்தை ஆரோக்கியமாக்க உதவுகின்றது.
அவகேடோவில் பொற்றாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளுடன் ஆரோக்கியமான கொழுப்புகளின் உயர் மட்டத்தைக் கொண்டிருக்கின்றது. உடற்பயிற்சியின் பின் தசைப்பிடிப்பைக் குறைக்கவும் தசைச் சுருக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.
புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நட்ஸ்கள் மற்றும் விதைகளில் காணப்படுகின்றன.
அவை உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தவை மற்றும் புரதம் நிறைந்த உள்ளடக்கம் எலும்புகள், தசைகள் மற்றும் தோலை உருவாக்க உதவும்