என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க
பொதுவாகவே பெண்களும் ஆண்களும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தான் விரும்புவார்கள். அதிலும், அழகு விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அதற்காக பார்லர்கள் சென்று தங்களின் சருமத்தையும் உடலையும் மெருகூட்டிக் கொள்வார்கள். ஆனால் சில இயற்கையான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு எந்த வயதிலும் அழகை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் சில உணவுகளை சாப்பிட்டால் இளமை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இளமையை பாதிக்கும் உணவுகள்
இளமையை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் மைதா மாவில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்ப்பது சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் முகப்பரு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தினமும் அதிக உப்பை எடுத்துக் கொள்வதால் உடலில் அதிக வீக்கத்தை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தோலில் பொலிவு குறைந்துக் கொண்டே வரும்.
ஆண், பெண் இருபாலாரும் தற்போது மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்காது என்றாலும் இதனை அதிகம் உட்கொள்வது சருமத்தை பாதிக்கும்.
தினமும் காபி அருந்துவதால் காஃபின் அளவு சருமத்தை உலர செய்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |