சிக்கன் சாப்பிட்டதும் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?
சிக்கன் சாப்பிட்ட பின்பு எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிக்கன் தான். சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா என பல வகைகளில் செய்து அசத்துவார்கள்.
இவ்வாறு விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும், சில நேரத்தில் உடல்நல பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதாவது சிக்கனை சாப்பிட்ட பின்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சிக்கனை சாப்பிட்டு மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், புரதச்சத்து முழுமையாக கிடைக்காமலும் போய்விடும்.

என்னென்ன சாப்பிடக்கூடாது?
சிக்கன் சாப்பிட்ட பின்பு உடனே இனிப்பு பலகாரம் சாப்பிடுவது கூடாது. ஏனெனில் சிக்கன் சாப்பிடுவதற்கு முன்பு இனிப்பு பலகாரத்தின் சர்க்கரை வயிற்றிலுள்ள இடத்தினை அடைத்து மந்தமாக்கிவிடும். இதனால் உடல்சோர்வு பிரச்சனை ஏற்படும்.
மேலும் டீ மற்றும் காபி போன்றவற்றினை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதிலுள்ள டானின் இரும்புச்சத்தை உடல் ஏற்பதற்கு தடைசெய்யுமாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடுவது கூடாது. ஏனெனில் சிக்கன் செரிமானம் ஆவதற்கு தாமதமாகும் நிலையில், பழங்கள் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
சிக்கன் சாப்பிட்ட உடன் பால், தயிர் மற்றும் மோர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் கோழியில் உள்ள புரதம் மற்றும் பாலில் உள்ள புரதம் செரிமானம் ஆவதற்கு அதிகமான நேரம் எடுப்பதுடன், வயிறு உப்புசம், வாயு பிரச்சனை, வயிறு வலி ஏற்படும்.

சிக்கன் சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சீரகம் அல்லது பெருஞ்சீரகம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் செரிமானம் மேம்படும்.
இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் சிறிய துண்டு வெல்லம் சாப்பிடலாம். செரிமான அமிலத்தை தூண்டி ஜீரணத்தை எளிதாக்கும்.
ஒருமணி நேரம் கழித்து வாழைப்பழம் அல்லது பப்பாளி போன்றவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |