காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் - மருத்துவ விளக்கம்
காலையில் எழும்பியதும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்
இரவு முழுக்க பட்டினி கிடக்கும் நம் வயிற்றில் காலையில் எழுந்து நாம் சாப்பிடும் உணவு முக்கியமானது. எனவே தான் காலையில் எந்த உணவை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில், வெறும் வயிற்றில் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை பிரபல உணவு நிபுணர் விளக்கமாக கூறியுள்ளார். அந்த உணவுகள் என்ன என்பதை பதிவில் பார்ககலாம்.

பழச்சாறு - அப்பவே எடுத்த புதிய பழச்சாறாக இருந்தாலும் அல்லது அது ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட சாறாக இருந்தாலும் அவற்றில், சர்க்கரை அதிகமாக உள்ளது. எனவே வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதால் பிரக்டோஸ் இரத்த ஓட்டத்தில் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
இது கணையம் மற்றும் கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தால், அது அவர்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
இதை தொடர்ந்து குடிப்பது காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். ஆனாலும் நான் பழச்சாறு குடித்து பழகிவிட்டேன் குடிக்கத்தான் வேண்டும் என்றால் நார்ச்சத்து பழங்களில் சியா விதைகள் சேர்த்து குடிப்பது பாதிப்பை குறைக்கும்.

தயிர் - தயிரில் நல்ல அளவு புரோபயாடிக்குகள் அதாவது நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கால்சியம் உள்ளது.
இதை நீங்கள் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்று கோளாறு வரும். காலையில் வயிற்றில் அதிக ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருப்பதால் பெரும்பாலான நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, தயிர் சாப்பிடுவதால் விரும்பிய நன்மைகள் முழுமையாக அடையப்படுவதில்லை. வெறும் வயிற்றில் தயிர் குடிப்பதால் சிலருக்கு அதிக அமிலத்தன்மை (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

காரமான உணவு - காரமான உணவுகளில் கேப்சைசின் இருப்பதால் வெறும் வயிற்றில் காரமான உணவை உண்பது செரிமான மண்டலத்தின் புறணியை எரிச்சலூட்டுகிறது.
இது அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று வலி மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே காலையில் மிகவும் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதுபோன்ற உணவுகளை தவிர்த்தால் மட்டுமே உடலின் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |