5 வயதிற்குட்டபட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள்! மீறினால் ஆபத்து நிச்சயம்
பெற்றோர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவாலான விஷயம் குழந்தை வளர்ப்புத்தான்.சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கித்தை ஊட்டி வளர்ப்பது மிகவும் முக்கியமாக அமைகின்றது.
குழந்தை பிறந்த உடனனேயே அவர்களுக்கு நாம் அனைத்து உணவையும் கொடுப்பதில்லை. அவர்களுக்கு ஒவ்வொருவயது வரும் போது தான் நாம் படிப்படியாக உணவளிக்க ஆரம்பிக்கிறோம்.
ஆனால் சில பெற்றோர்கள் எல்லா உணவுகளையும் குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்தவுடன் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். இப்படி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் வருவதற்கு முகங்கொடுக்க நேரிடும்.
எனவே 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகளை கொடுக்க வேண்டும் அவர்கள் எதை சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கொடுக்கக்கூடாத உணவுகள்
தேனில் அதிகதாக வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றது.இது செரிதான அமைப்பையும் சீராக வைத்திருக்க உதவும். ஆனால் இதை குழந்தைகள் அனவிற்கு அதிகமாக சாப்பிட்டால் செரிதான பிரச்சனைகளை கொண்டு வரும்.
தேவைப்பட்டால் கொஞ்சமாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். எப்படியாவது பெற்றோர்களிடம் அடம்பிடித்து வாங்கி குடிப்பதை வழக்கதாக வைத்துள்ளனர்.
ஆனால் இது ஆபத்தானது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குளிர்பானங்களை அதிகளவில் கொடுக்கக்கூடாது. இதில் அதிகளவு சர்க்கரை மற்றும் காபின் அதிகளவு உள்ளதால் உடல் பருமன், வாயு மற்றும் செரிமான பிரச்சனையைப் பாதிக்கும்.
குழந்தைகளுக்கு பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இந்த நட்ஸ் வகைகளை அவர்களுக்கு மென்று சாப்பிட தெரியாது.
இந்த காரணத்தினால் செரிமானம் பாதிக்கப்படும். இதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக குழந்தைகள் சிப்ஸ், பப்ஸ் போன்ற காரசாரமான நொறுக்குத் தீனிகள் சாப்பிட விரும்புவார்கள்.
இது அவர்களுக்கு வயிற்று வலி, அஜீரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இது தவிர குழந்தைகள் சாப்பிட கூடாத மிகவும் முக்கியமான உணவு பாப்கார்ன் தான்.
இதில் உள்ள சிறு சிறு துகள்கள் அவர்களின் நாசியில் ஒட்டிக்கொண்டு மிகவும் சிரமப்படுவார்கள். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர பழச்சாறு, சரியாக வேக வைக்காத இறைச்சிகள் போன்ற பல உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |