சிறுநீரக கல் பிரச்சனையா? இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க
Kidney Stones: சிறுநீரக கற்கள் பாதிப்பினை மேலும் அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தினாலும், மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக சிறுநீரக பிரச்சனையால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக சிறுநீரக கல் பிரச்சனை வயது பாகுபாடு இல்லாமல் இருகின்றது. ஒருவரது சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற கனிமங்கள் சேரத் தொடங்குகின்றதோ அப்பொழுது சிறுநீரகத்தில் கல் உருவாகின்றது.
இவ்வாறு சிறுநீரக கல் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி மற்றும் எரிச்சல் காணப்படும்.
ஆனால் சில உணவுகளை நாம் கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த பிரச்சனையை தடுக்க முடியும். அதுமட்டுமின்றி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி, தயிர் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
அவ்வாறு சிறுநீரக கற்களின் அபாயத்தினை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
உப்பு நிறைந்த உணவுகளான ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், நொருக்குத் தீனி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றிலை் சோடியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இவ்வாறு உப்பு அதிகம் நிறைந்த உணவினை எடுப்பதால் சிறுநீரில் கால்சியம் அளவு அதிகரித்து, கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படுகின்றது.
சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையில் ஆக்ஸலேட் அதிகமாக உள்ளதால், இதனை அதிகமாக எடுத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் ஏற்படும். ஆகையால் அளவோடு சேர்த்துக் கொள்ளவும்.

பீட்ரூட் உடலுக்கு ரத்தத்தினை அதிகரிக்க உதவி செய்தாலும், இதில் ஆக்ஸலேட்டுகள் அதிகமாக இருக்கின்றது. இதனையும் அளவோடு எடுத்துக் கொள்ளவும்.
சாக்லேட் மற்றும் கொக்கோ சால்லேட் இவற்றிலும் அதிகளவில் ஆக்ஸலேட்டுகள் உள்ள நிலையில், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இதே போன்று அசைவ உணவுகளான மாட்டிறைச்சி, சிக்கன், மீன் இவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இவை சிறுநீரில் யூரிக் அமில அளவை அதிகரித்துவிடுகின்றது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.

குளிர் பானம் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களில் இருக்கும் சர்க்கரை மற்றும் ஃபுருக்டோஸ் அதிகளவில் இருக்கின்றது. இவை சிறுநீரக கற்களை உருவாக்குமாம். ஆகையால் செயற்கை பழச்சாறு அருந்துவதை தவிர்க்கவும். இதற்கு பதிலாக தண்ணீர் அதிகமாக பருகவும்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |