அசைவ பிரியர்கள் விரும்பும் முட்டை கீமா மசாலா....
Egg Kheema Masala: முட்டையை சாதாரணமாக சமைக்காமல் முட்டை கீமா மாசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் புரதச்சத்து அதிகமாகவே உள்ளது. குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்நிலையில் முட்டையை சாதாரணமாக கிரேவி, குழம்பு இவ்வாறு செய்து சாப்பிட்டுள்ள நிலையில், சற்று வித்தியாசமாக முட்டை கீமா மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
குறிப்பாக சப்பாத்திக்கு இந்த முட்டை கீமா அருமையான சைடிஷ்ஷாக இருக்கும். மேலும் அசைவ பிரியர்களும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (இரு துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - சிறிது
வேக வைத்து துருவிய முட்டை - 4
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முட்டையை அவித்து துருவி வைத்துக் கொள்ளவும். வாணலி ஒன்றினை அடுப்பில் அதில் வெண்ணெய் சேர்க்கவும். பின்பு சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

நன்றாக வதக்கிய பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
இதனுடன் துருவி வைத்த முட்டையை சேர்த்து கிளறி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை கீமா மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |