இந்த உணவுகளை சாப்பிடாதீங்க - முடி கொட்டுவது அதிகரிக்கும்
வழக்கத்தை விட தலைமுடி அதிகமாக கொட்டினால் குறிப்பிட்ட சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முடி கொட்டுவதை அதிகரிக்கும் உணவுகள்
தற்போது முடி உதிர்தலை ஆண்கள் பெண்கள் என இருவரும் அதிகமாக எதிர்கொள்கின்றனர். பெண்களுக்காவது முடி கொட்டுதல் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு முடி கொட்டினால் அது வழுக்கையில் வந்து நிற்கும்.
இந்த முடி கொட்டும் பிரச்சனைக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மன அழுத்தம், மாசுபாடு ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றது. இது தவிர சில உணவுகளும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு வேளை வழக்கமாக முடி உதிர்தலை விட அதிகமாக முடி உதிர்ந்தால் நீங்கள் சாப்பிடும் உணவு தான் உங்களுக்கு விஷம். அதை கட்டாயம் கண்டுபிடித்துகொள்வது அவசியம்.
இல்லையெனில் அவை முடி உதிர்தலைவேகமாக்கிவிடும். எனவே, இந்த பதிவில் முடி உதிர்தலுக்கு என்ன உணவுகள் காரணம் என்பதை பார்க்கலாம்.

சர்க்கரை
சர்க்கரை, சாக்லேட், கூல் ட்ரிங்க்ஸ், இனிப்பு பண்டங்கள் போன்றவை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அவை தலை முடிக்கு நல்லதல்ல.
காரணம் அதில் இருக்கும் சர்க்கரை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரித்து ஹார்மோன் சமநிலைமையை ஏற்படுத்தும். இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும்.
ஜங்க் ஃபுட்
பீட்சா, பர்கர், பிரஞ்சு பொரியல் போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளில் நிறைவேற்ற கொழுப்புகள் அதிகமாகவே உள்ளன. அவை செபாசியஸ் சுரப்பிகளை அடைத்து உச்சந்தலையில் பொடுகு மற்றும் தொற்றுக்களை உண்டாக்கும். இதனால் தலைமுடி பலவீனமடைந்து உதிர ஆரம்பிக்கும்.

உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள்
வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, பாஸ்தா போன்ற உணவுகள் அனைத்திலும் கிளைசெமிக் குறியீட்டு அதிகமாக உள்ளன.
இவை ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும். இதனால் சாதாரணமாக உதிரும் முடியை விட இது அதிகம்.
டயட் சோடா
டயட் சோடாக்களில் செயற்கை இனிப்புகள் உள்ளன. அது முடி உதிர்வை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முடி உதிர்தலை குறைக்க டயட் சோடாக்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

மதுபானம்
துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை முடி வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும். அவற்றில் குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்தல் ஏற்படும். எனவே நீங்கள் மதுபானம் குடித்தால் அது உடலில் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வை உருவாக்கும். இதனால் முடி உதிரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |