சிறுநீரகம் சுத்தமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க
உடலின் முக்கிய பாகங்களில் ஒன்றான சிறுநீரகம் சுத்தமாக இருக்க அன்றாட உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகம்
நமது உடலில் அனைத்து பாகங்களுககும் முக்கிய பங்கு உண்டு. அவற்றில் ஒன்று தான் சிறுநீரகம். இது உடலில் பல முக்கிய வேலைகளை செய்கிறது.
மிக முக்கியமாக உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் வேலையை சிறுநீரகம் தான் செய்கிறது. ஒரு வேளை சிறுநீரகம் சரியாக செயற்படவில்லை என்றால் நமது ரத்ததில் நச்சுக்கள் கலக்க நேரிடும்.
இதனால் பல நோய்களுக்கு உள்ளாகுவோம். எனவே நாம் அன்றாட உணவில் சிலவற்றை சேர்த்து சாப்பிடும் போது அது நமது சிறுநீரகங்களை பாதகாப்பாக வைத்திருக்கும். அந்த உணவுகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

சுத்தமாக்கும் உணவுகள்
சிட்டஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவை சிறுநீரகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது என கூறப்படுகின்றது.
இந்த வைட்டமின் சி சிறுநிரகத்தில் நச்சுக்கள் தேங்கி நின்றால் அவற்றை உடலை விட்டு வெளியேற்றும். மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதை இரு தடுக்க உதவும்.
அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு பழம் தான் வெள்ளரிக்காய். மக்கள் பெரும்பாலும் இந்த பழத்தை வெயில் காலங்களில் தான் சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
இதில் யூரிக் எனும் பதார்த்தம் உள்ளது இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். எனவே வெள்ளரிக்காயை முடிந்தளவு சாப்பிடுங்கள்.

பலருக்கும் செலரி எனும் ஒரு காய்கறி வகை இருப்பதே தெரியாது. இந்த செலரியை எப்படி சாப்பிட்டாலும் அது உடலுக்கு அதிக நன்மைகளை தரும்.
செலரியை நமது உணவில் பானமாகவோ அல்லது வேறு விதமாகவோ உள்கொள்ளும் போது அது சிறுநீர் பெருக்கிறாக செயல்பட்டு சிறுந்ீர் உற்பத்தியை சீராக செய்யும். இதனால் உடல் நச்சுக்கள் தானானக வெளியேறும். சிறுநீரகம் சுத்தமாக இருக்கும்.
சிறுநீரக சுத்திகரிப்பில் தண்ணீருக்கு அதிக பங்கு உண்டு. உருவர் ஒருநாளைக்கு எவ்வளவு தய்யீர் குடிக்க வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
ஒருவேளை நாம் குறைவான அளவில் தண்ணீர் குடித்தால் நமது சிறுநீரகத்தில் வந்துசேரும் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் இருக்கும்.

இதனால் சிறுநீரக கல் உருவாகும்,சிறுநீர் அடர் மஞ்சளாக வரும்,சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி போன்ற பிரச்சனைகள் வரும். எனவே தண்ணீரை அதிகமாகவும் குடிக்க கூடாது குறைவாகவும் குடிக்க கூடாது. சரியான அளவில் குடித்தால் சிறுநீரகம் சுத்தமாக இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவில் தேவையானவற்றை உடுத்து கொண்டு மிச்சமானவை உடல் கழிவுகளாக அனுப்பபடுகின்றன. இந்த கழிவுகள் உடலை விட்டு போக நாம் சரியான உணவுப்பழக்கத்தை மேற்கொள்வது அவசியம்.
உடல் உள் உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை எப்போதும் சாப்பிட வேண்டும். அதிகளவில் துரித உணவுகள் சாப்பிட்டால் உடல் உறுப்புக்கள் நம் உயிர்வாழ ஒத்துழைக்காது. இதனால் நாம் நோய்வாய்பட நேரிடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |