இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கியே ஆகணும்.. அப்போ இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க!
பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாடு முதல் சுவாசிக்கும் காற்று வரை உடலினுள் கொண்டு செல்வதில் இரத்தம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் பிற மாசுக்களை நீக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது.
அத்துடன் இரத்தத்தை சுத்தப்படுத்துவது உடலில் இருந்து நச்சுக்களை இயற்கையாக வெளியேற்றி, நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றும் இரத்தத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
அந்த வகையில் மருந்துகள் அல்லாமல் இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள் தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள்
1.மூலிகை பொருட்களின் ஒன்றான பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யும் முக்கிய பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் வலுவான ஆண்டிமைக்ரோபியல் உள்ளது.
இது கல்லீரல், குடல் இவைகளை பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து காக்கின்றது.
2.நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட மாசுக்கள் இருக்கின்றன. இதனை சுத்தம் செய்யும் பங்கில் கொத்தமல்லி இலைகளை முக்கிய பங்காற்றுகின்றன. அத்துடன் தினமும் உணவில் கலந்து கொள்வதால் இரத்தத்தை நச்சுத்தன்மையை நீக்கி வீக்கத்தைக் குறைக்கின்றன.
3. பார்ப்பதற்கு சிவப்பாக இருக்கும் பீட்ரூட்டில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.
இது கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்கவும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவியாக இருக்கின்றன. மேலும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |