நீண்ட நேர தாம்பத்தியம் வைத்துகொள்ளவேண்டுமா? இயற்கை முறையில் எளிய டிப்ஸ்!
பல இளம்தம்பதிகளுக்கும் நீண்ட நேரம் தாம்பத்திய உறவு மேற்கொள்ள முடியவில்லை என்ற மன அழுத்தம் இருக்கிறது. இதனால், வயாகரா போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.
நம்முடைய உணவுகளிலேயே நீடித்த தாம்பத்திய உறவுக்கு வழி செய்யும் ரசாயனங்கள் அடங்கியுள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான முறையில் விரைப்புத் தன்மை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
முந்திரி பருப்பில் அதிகப்படியான இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின்கள், செலீனியம், மக்னீஷியம் உள்ளது. இது பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவு வைக்கவும் உதவுகிறது. அதிக கொழுப்பு மிக்கது என்பதால் அதை சரி செய்யும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தால் போதும். மற்றபடி எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை வயாகராவாக அது செயல்படும்.
வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. அது மூளையில் அமைதியான, மகிழ்வான மனநிலையை உருவாக்க உதவும் டோபோமைன் போன்ற நியூரோடிரான்ஸ்மீட்டர் சுரப்பைத் தூண்டும்.
மேலும் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடுதான் நீண்ட நேரம் விரைப்புத் தன்மையுடன் தாம்பத்தியம் இருக்க துணை புரிகிறது. மாதுளை பழத்தை சாப்பிட்டுவந்தால் உடலுக்குத் தேவையான முழு ஸ்டாமினாவும் கிடைக்கும்.
தொடர்ந்து மாதுளை பழ ஜூஸ் அருந்தி வருவது இயற்கையான முறையில் வயாகராவை சாப்பிடுவதற்கு இணையானது. அதே நேரத்தில் பக்கவிளைவுகள் இல்லாதது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆண் இனப்பெருக்க உறுப்புக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
தர்பூசணி பழத்தை இயற்கை வயாகரா என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தர்பூசணி சாப்பிட்டு வருவது ஆண் உறுப்பின் விரைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. விரைப்புத் தன்மை பிரச்னை இருந்தால் அதை சரி செய்கிறது.
தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் ஆண் உறுப்புக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது என சிறுநீரகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதாமில் அதிக அளவில் துத்தநாகம், செலீனியம், வைட்டமின் இ உள்ளது.
இது டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆண் உறுப்புக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. விரைப்புத் தன்மை பிரச்னை போக்குவதுடன், அந்த பிரச்னை வராமல் தடுக்கவும் செய்கிறது.
