பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்?

Health Food Rice Diabetes Soda
By Nivetha Oct 11, 2021 12:19 AM GMT
Nivetha

Nivetha

Report
175 Shares

பிரபலமான கன்னட நடிகர் சத்யஜித்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

நீரிழிவு நோயால் கடுமையாக அவதிப்பட்டு கொண்டிருந்த அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

உயிரை பறிக்கும் இந்த ஆபத்தான கொடிய நோய் இருப்பவர்கள் உணவில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்? | Foods Should Avoid Diabete

சர்க்கரை நோயாளிகளை பொதுவாக அரிசி உணவுகள், இனிப்பு உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள்.

அதையும் தாண்டி, கார்போ நிறைந்த உணவுகள் எப்போதுமே சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகத் தான் இருக்கும் என்பதை ஒரு போதும் நாம் மறந்துவிடக் கூடாது.

அப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் மோசமான ஆபத்தைக் கொடுக்கும் சில உணவுகளைப் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். ​

பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்? | Foods Should Avoid Diabete

வெள்ளை பிரட்

இன்றைய அவசர யுகத்தில் பிரட் சாப்பிட்டுவிட்டு தங்கள் பணிக்கு செல்வதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு உணவாக இருந்தாலும் வெள்ளை பிரட் ஒரு சிறப்பான தேர்வு அல்ல. வெள்ளை பிரட் சுத்தீகரிக்கப்பட்ட மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டசத்துகள் குறைவாக இருக்கும். உடல் இந்த உணவை எளிதில் உறிஞ்சுகிறது.

எளிதில் உறிஞ்சப்படும் உணவு இன்சுலின் வெளியீட்டை ஊக்குவித்து இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பிரெட்டுக்கு , மாற்றாக முழு தானிய பிரட் அல்லது முழு கோதுமை பிரட் உட்கொள்ளலாம்.

ஒரு பிரட் மற்றும் இதனுடன் காய்கறிகள் , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்? | Foods Should Avoid Diabete

சர்க்கரை சேர்க்கப்பட்ட காலை உணவு

இன்றைய நவீன உலகத்தில் காலை உணவாக நாம் தேர்ந்தெடுக்கும் மற்றொரு விரைவு உணவு சர்க்கரை சேர்க்கப்பட்ட தானிய உணவு வகைகள்.

கார்ன் பிளேக்ஸ் போன்ற இனிப்பு சேர்க்கப்பட்ட தானிய உணவுகளை விரும்பி உண்ணுகிறோம். ஆனால் இவற்றில் கொழுப்பு செரிமான கார்போஹைட்ரேட், சர்க்கரை போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இவற்றில் க்ளைகோமிக் குறியீடு அதிகமாக உள்ளது.

இவை உங்கள் உடலால் எளிதில் உடைக்கப்பட்டு , உங்கள் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. மேலும் இந்த வகை உணவுகளில் அதிக கலோரி மற்றும் குறைவான ஊட்டச்சத்துகள் உள்ளன.

ஆகவே குறைவான க்ளைகோமிக் குறியீடு கொண்ட தானிய உணவுகளை உட்கொள்ளலாம். இவை மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஓட்ஸ், நெளிகோதுமை, கோதுமை முளை, பார்லி போன்ற தானியங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்? | Foods Should Avoid Diabete

சோடா

இனிப்பான சோடா வகைகள் இன்றைய நாட்களில் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

2010 ம் ஆண்டு நடத்தப்பட்ட நீரிழிவு பராமரிப்பு குறித்த ஆய்வில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பதுடன் , வளர்சிதை மாற்ற நோய்க்குறி வளர்ச்சி மற்றும் டைப் 2 நீரிழிவு ஆகியவை ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன .

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இனிப்பு மிகுந்த சோடா பானங்களை தவிர்ப்பது நல்லது. இவற்றுக்கு மாற்றாக க்ரீன் டீ போன்ற ஆரோக்கிய பானங்களை தேர்வு செய்யலாம்.

பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்? | Foods Should Avoid Diabete

​வெள்ளை அரிசி

ஆசிய உணவு வகைகளில் வெள்ளை அரிசிக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. ஆனால் வெள்ளை அரிசியில் உயர் க்ளைகோமிக் குறியீடு இருக்கிறது மற்றும் இதில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளது.

வெள்ளை அரிசி அதிகம் உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு அபாயம் அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்துவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது.வெள்ளை அரிசிக்கு மாற்றாக முழு தானிய வகைகள், பழுப்பு அரிசி போன்றவற்றை இணைத்துக் கொள்வதால் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

சுத்தீகரிக்கப்ட்ட தானியங்களை விட முழு தானியங்கள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கப்படும் கார்போஹைட்ரேட் சத்துகள் டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்துகின்றன.

ஆகவே வெள்ளை அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி மற்றும் உயர் நார்ச்சத்து கொண்ட அரிசி வகைகளை பயன்படுத்தலாம்.

இவை இரத்தஓட்டத்தில் குளுக்கோஸ் பாயும் அளவைக் குறைக்க உதவுகின்றன. ​

பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்? | Foods Should Avoid Diabete

அதிக இனிப்பு தன்மை கொண்ட பழங்கள்

பழங்கள் அனைவருக்கும் நன்மை தரும்.

நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்ளலாம். ஆனால் உயர் இனிப்பு தன்மை கொண்ட பழங்களை மட்டும் தவிர்க்கலாம். வாழைப்பழம், மெலன், மாம்பழம், சப்போட்டா போன்றவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது. இவற்றை உண்பதால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆனால் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

இவற்றை மிகச் சிறிய அளவு எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ப்ளூபெர்ரி , அவகேடோ, ஆப்பிள் , கொய்யா போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

அவற்றில் நார்ச்சத்தும் அதிகம். சர்க்கரையின் அளவும் குறைவு.   

ஆபத்து வரும் முன்பு அனைக்கட்ட வேண்டும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். நீரிழிவு நோயாளிகளும் அப்படி தான். உணவு ஆபத்தாக மாறுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டுடன் உயிரை பாதுகாத்து கொள்ள வேண்டும்.



இதையும் தெரிந்து கொள்வோம் : 17 ஆண்டுகளாக காட்டுக்குள் வசிக்கும் மனிதர்- நெஞ்சை உருக்கும் காரணம் 


13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US