கணிணியில் அதிகம் வேலையா? கண்கள் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு அவசியம்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல் மற்றும் கணினியின் செயல்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும், இவற்றிலிருந்து வரும் திரை ஒளி நம் கணகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான தருணத்தில் கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவதற்கு, கண் பார்வையை வலுவடையச் செய்யும் பொருட்களை நாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்பார்வையை மேம்படுத்தும் உணவுகள்
பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களைக் கொண்ட கேரட்டினை எடுத்துக்கொண்டால் கண்பார்வை மேம்படும்.
பச்சைக்காய்கறிகளிலும் வைட்டமின் ஏ, சி, பி சத்துக்கள் காணப்படுவதுடன் இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸின்கள், இரும்பு மற்றும் லுடீன் போன்ற கூறுகள் கண்பார்வையை கூர்மையாக்கவும் செய்கின்றது.
கடல் உணவான மீன்களை உட்கொள்வதால் விழித்திரையின் வலிமையை அதிகரிப்பதுடன் மற்றும் பார்வையையும் மேம்படுத்தவும் செய்கின்றது.
வைட்டமின் சி சத்துக்களை அதிகம் கொண்ட நெல்லிக்காய் சாப்பிட்டால் கண்பார்வை வலுவடைவதுடன் கண்பார்வைக்கு மிகச் சிறந்த ஆதாரமாகவும் இருக்கின்றது.
பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்களிலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் ஏ காணப்படும் நிலையில், இவையும் கண் பார்வையை மேம்படுத்துவதுடன், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |