காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஆளே மாறிடுவீங்க
காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி அருந்தும் பழக்கம் பலருக்கும் உண்டு, ஆனால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகவும் ஆபத்தானது என உங்களுக்கு தெரியுமா?
செரிமான பிரச்சினைகள் மட்டுமின்றி, அதிக உடல் எடை மற்றும் குடற்புண்கள் என பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
எனவே காலை எழுந்துவுடன் எவ்வாறான உணவுகளை எடுத்துக் கொள்வது, என்ன சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
காலையில் சாப்பிடக்கூடிய உணவுகள்
ஊற வைத்த பாதாம் பருப்பு
பொதுவாக ஊற வைத்து எடுத்த பாதாமில் மாங்கனீசு, வைட்டமின் ஈ, புரோட்டீன், நார்ச்சத்து, ஒமேகா-3 உள்ளிட் ஏராளமான சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.
இதனை வெறும் பாதாமாவாக எடுத்துக் கொள்வதை விட ஊற வைத்து பாதாமாக எடுத்துக் கொள்வதே அதிக பலனை தருகிறது.
பாதாமிலுள்ள தோல், ஊட்டச்சத்துக்கள் உடம்பில் உறிஞ்சிவதனை கட்டுப்படுத்துவதால் தோல் நீக்கி சாப்பிடவும்.
Shutterstock
இளம் சுடுநீர் மற்றும் தேன்
பொதுவாகவே காலையில் தேன் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனின் தேனில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய நொதிகள் காணப்படுகின்றனர். இதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் குடற்புண்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும்.
இதனை தொடர்ந்து தேனை தனியாக எடுத்துக் கொள்வதை விட இளம் சுடுநீருடன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
இது வயிற்றிலுள்ள டாக்ஸின்கள் எளிதில் வெளியேற்ற உதவுகிறது மற்றும் உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு உடலுக்கு புதிய ஆற்றல் கிடைக்கிறது.
உலர் திராட்சை
உலர் திராட்சையை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் எடுத்து்க கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.
மேலும் இந்த உலர் திராட்சையில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது, இதனை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது.
பப்பாளி பழம்
பப்பாளிப்பழத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
மேலும் அது குடல் ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது, தொடர்ந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
எனவே காலையுணவிற்கு முன்னர் பப்பாளிப்பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தாகும்.
தர்பூசணிபழம்
தர்பூசணிபழத்தில் 90 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகின்றது, இது ஒருவரின் எலக்ட்ரோலைட்டுகள் முழுமைப்படுத்த செய்கிறது.
இதனை காலையில் எடுத்துக் கொள்வது சிறந்தது, ஏனெனின் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வழங்குகிறது.
மேலும் ஒரு கப் தர்பூசணியில் 40 கலோரிகளே உள்ளன என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவை இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உதவுகிறது.
காலையில் சாப்பிடகூடாத உணவுகள்
தயிர்
வெறும் வயிற்றில் தயிரை எடுத்துக் கொள்வதால் வயிற்றில் புளித்த பால் தயாரிப்புக்கு உதவும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இதனால் குடற்புண்கள் அதிகமாகலாம்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் அதிக அளவு அமிலங்கள் காணப்படுகிறது. இது செரிமான சாறுகளுடன் கலந்து நெஞ்செரிச்சல், எரிச்சல் மற்றும் பிற இரைப்பை பிரச்சினைகளை போன்றவற்றை ஏற்படுத்தும்.
காபி
காலையில் காபி குடிப்பதால் வயிற்றில் செரிமாண பிரச்சினை எழ அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது. ஏனெனின் இதில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பியை தூண்டுகிறது.