மூளைக்கு வேலைக் கொடுக்கும் 3 முக்கிய உணவுகள்! தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மூளையின் செயற்பாடு என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
மூளையின் செயற்பாட்டை நாம் உட்க்கொள்ளும் சாப்பாட்டின் மூலம் தான் கட்டுப்படுத்தலாம்.
புரதச்சத்துக்கள் நிறைந்த கடலை வகைகள், பருப்பு, முட்டை ஆகிய உணவில் தான் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.
அந்த வகையில் மூளைக்கு வேலைக் கொடுக்கும் உணவு வகைகள் என்ன என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
Image - The Guardian Nigeria
1. பாதாம்
பாதாம் தினமும் எடுத்து கொள்வதால் மூளையில் இருக்கும் acetylcholine அளவு அதிகரிக்கும். அத்துடன் வைட்டமின் பி 6, ஈ, துத்தநாகம் மற்றும் புரதங்கள் காணப்படுகின்றது. இது மூளையில் வேலையை அதிகப்படுத்துகின்றன.
2. பூசணி மற்றும் ஆளிவிதை
பாதாமைப் போல் இருக்கும் பூசணி மற்றும் ஆளிவிதைகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் ஆகிய ஊட்டசத்துக்கள் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
3. முட்டை
டயட்டில் இருப்பவர்கள் மற்ற உணவுகளை விட முட்டையை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறுவார்கள். ஏனெனின் முட்டையில் வைட்டமின் பி-6 மற்றும் பி-12 உள்ளது. இது மூளையிற்கு ஊக்கமளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |