எவ்ளோ பெரிய தொப்பையா இருந்தாலும் வெறும் 2 வாரத்துல கரைக்கணுமா? இத சாப்பிடுங்க!
எடையைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் வழியாக எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.
குறிப்பாக, நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் கொண்ட சில உணவுகளைத் தனியாக எடுத்துக் கொள்வதை விட சேர்த்து எடுத்துக் கொள்வதினால் உடலில் கெட்ட கொழுப்புகள் கரைக்க முடியும்.
என்னென்ன உணவுகளைச் சேர்த்து சாப்பிடுவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

முட்டை - முட்டைகோஸ்
முட்டையில் அதிக அளவிலான புரோட்டீன் இருக்கிறது. அதேபோல முட்டைகோஸில் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.
புரத உணவோடு வைட்டமின் சி நிறைந்த முட்டைகோஸை சேர்த்து சாப்பிடும்போது, அது இயல்பாகவே பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்கிறது.
அதோடு உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. அதனால் இயல்பாகவே உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும்.
டார்க் சாக்லெட் - பாதாம்
டார்க் சாக்லெட் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி செய்கிறது.
ஆனால் அது வெறும் டார்க் சாக்லெட்டாக மட்டும் தான் இருக்க வேண்டும். இந்த டார்க் சாக்லெட்டுடன் பாதாம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.

மற்ற பால், சர்க்கரை அல்லது மற்ற பொருள்கள் சேர்க்கப்பட்ட சாக்லெட்டுகள் எடை குறைக்க உதவுவதில்லை.
டார்க் சாக்லெட்டில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைய இருக்கின்றன. இவை மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் தேவையற்ற அதிக கலோரிகளைக் குறைக்க உதவி செய்கிறது.

இலைவடிவ காய்கறி - அவகேடா
இலை வடிவ காய்கறிகளில் நிறைய வைட்டமின்களும் மினரல்களும் நிரம்பி இருக்கின்றன.
இந்த இலை வடிவ காய்கறிகளுடன் அவகேடோவும் சேர்த்து தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் அது உடலில் நல்ல கொழுப்பு அமிலங்களின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நல்ல கொழுப்பு அமிலங்கள் உடலில் சேரும்போது, அது அதிகப்படியாக பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவி செய்கிறது.